உலகின் மிகப் பெரிய டேட்டா ப்பிரீச்-28 மில்லியன்

02 July 2019 தொழில்நுட்பம்
TARINGA.jpg

அமெரிக்காவில் லத்தீன் பேசும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளமான டரிங்காவின் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் உள்ள சுமார் 28,222,877 பேரின் இரகசியத் தகவல்கள், பாஸ்வேர்ட் மற்றம் அவர்களின் அந்தரங்கத் தகவல்கள் கசிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனை அந்நிறுவனத்தால் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

டரிங்கா

இது லத்தீன் அமெரிக்கர்களுக்காகவே உருவாக்கப்பட்டது எனக் கூறலாம். அந்த அளவிற்கு இதனை லத்தீன் அமெரிக்க மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் ஃபேஸ்புக் போல ஒரு சமூக வலைதளமாக உள்ளது. இதனைப் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நாம் நம்முடைய போட்டோக்கள், வீடியோக்கள், மற்றும் பலவிதமானவற்றை ஷேர் செய்ய இயலும். இந்த டரிங்காவில் உள்ள பயனர்களின் பாஸ்வேர்கள் மற்றும் தகவல்கள் கசிந்துவிட்டன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இதன் தகவல்களையுடைய டேட்டாபேஸானது, "லீக்பேஸ்" எனும் வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

காரணம்

இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது இவர்கள் பயன்படுத்திய அல்காரிதமே ஆகும். இவர்கள் 2012க்கு முன்பே காலாவதியானதாகக் கருதப்படும் MD5 என்ற அல்காரிதத்தைப் பயன்படுத்தி வந்தனர். இதனை ஹேக்கிங் பழகுகின்றவர்களே எளிதாக முறியடித்துவிடலாம், என்ற நிலையில் இதனை மேம்படுத்தாததே இந்தத் தகவல் கசிவுக்குக் காரணம் ஆகும்.

எனினும், தற்போது அனைத்தையும் முற்றிலுமாக மாற்றிவருவதாகவும் மேலும், இதன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் டரிங்கா விளக்கமளித்துள்ளது. இது உலகளவில் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், இது சாதாரண விஷயமாகிவிட்டது. உலகளவில் பல நிறுவனங்களின் உள்ள பயனர்களின் இரகசியங்களும் தகவல்களும் கசிந்தவண்ணமே இருந்து வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது வெறும் கற்பனையான விஷயமாக மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.

HOT NEWS