இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அளவிலான எரிகல் மழையானது, டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் பெய்ய உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
உலகளவில் தற்பொழுது பேசு பொருளாக மாறியிருப்பது எரிகல் மழை தான். ஒரு எரிகல்லைப் பார்ப்பதே மிகப் பெரிய ஆச்சர்யமான விஷயம் ஆகும். இந்த எரிகல்லை பார்ப்பதை பலரும் விரும்புகின்றனர். அவைகள் மொத்தமாக புவிக்குள் வந்தால் எப்படி இருக்கும்? இந்த ஆண்டு பலவித அசம்பாவிதங்களும் கஷ்டங்களும் வந்த போதிலும், இந்த ஆண்டு இறுதியினை நாம் நெருங்கி விட்டோம். இந்த ஆண்டின் முத்தாய்ப்பான தகவலாகவும், இயற்கையாக நடைபெறும் அதிசயமாகவும் மாறியிருப்பது இந்த எரிகல் மழை தான்.
ஜெமினாய்டு எரிகல் மழை என அழைக்கப்படும் இந்த எரிக்கல் மழையானது, வானத்தில் மிதுன ராசி மண்டலத்தில் நடைபெற உள்ளது. இதனை நம்மால் வெறும் கண்களால் எவ்வித சிரமமும் இன்றிப் பார்க்க இயலும். உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டும் என்றாலும், இதனை நம்மால் பார்க்க இயலும். இந்த அரிய நிகழ்வானது டிசம்பர் 13ம் தேதியும், டிசம்பர் 14ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வினை டிசம்பர் 12ம் தேதி இரவு அதாவது, டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 2 மணி அளவிலும், டிசம்பர் 13ம் தேதி இரவு அதாவது டிசம்பர் 14ம் தேதி அதிகாலை 2 மணி அளவிலும் நம்மால் பார்க்க இயலும்.
இந்த எரிகற்கள் அனைத்தும், தொடர்ந்து மழை போல் விழுவதை நம்மால் வெற்றுக் கண்களால் பார்க்க இயலும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எரிகற்கள் பார்ப்பதற்கு வெண்மையாகவும், தெளிவாகவும் அதே போல் வேகமாகவும் செல்லும் என கூறப்படுகின்றது. புவியின் வடக்குப் பகுதியில் இது நடைபெற்றாலும், இதனை தெற்குப் பகுதியில் இருந்தும் தெளிவாகப் பார்க்க இயலும். இரவு 2 மணிக்கு சுமார் 50 விண்கற்களை நம்மால் காண இயலும்.
இது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புவியில் பயணிக்கும் என்றுக் கணிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 14ம் தேதி அன்று அமாவாசை என்பதால், நம்மால் வானத்தில் எவ்வித சிரமமும் இன்றி இந்த நிகழ்வினைக் காண இயலும். இந்த எரிகற்கள் அனைத்தும் 3200 பேதான் என்ற பெரிய கல்லில் இருந்து உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.