இணைய வலை எனும் கடலில் குற்றம் என்பது, சாதாரண குண்டூசியை, கடலில் தேடுவது போன்றது. யாராலும் எளிதில் கண்டுபிடிக்க இயலாத ஒன்று. பொதுவாக நாம் "GOOGLE" மற்றும் "YAHOO"போன்ற தேடுதளங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் சட்ட விரோத ஆயுதப் பரிமாற்றங்கள், ஆயுத விற்பனை, குழந்தைகள் விற்பனை, மனித உடல் உறுப்புகள் விற்பனை போன்றவை "DEEP WEB" எனப்படும் ஒருவகையான, யாரும் அறியாத, இனணயத்தின் ஒருப் பகுதியிலேயே, நடைபெறுகிறது.
இதனைப் பெரும்பாலும், சாதாரண மக்கள் பயனபடுத்துவதில்லை. சாதாரண பிரெளசரில், நாம் இதனைப் பயன்படுத்த இயலாது. "TOR" எனப்படும் பிரௌசரில் மட்டுமேப் பயன்படுத்த இயலும்.
உலக நாடுகள் அனைத்திலும் "DEEP WEB"-ஐ, பயன்படுத்துல் சட்டப்படிக் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனைப் பயன்படுத்துபவர்கள் இல்லாமல் இல்லை. இணையத் திருடர்கள் தங்கள் வியாபரத்தை சாதாரணமாக, இதில் செய்கின்றனர். இருப்பினும், இந்த சட்டவிரோத வியாபரத்தில், பல உயிர்களும் பலியாகி உள்ளது என்பதும், நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.
இந்த "DEEP WEB"–ல் செய்யப்படும் வியாபரத்திற்கு "VPN", PROXY SERVER"-களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றவாளிகளை அடையாளம் காண்பது மிகவும் சிக்கலானது உள்ளது.
இந்த ""DEEP-WEB""–ல் செய்யப்படும் வியாபரத்திற்கு, "DIGITAL MONEY" எனப்படும் "BITCOIN"-ஐ பயன்படுத்துகின்றனர். இதனால், இணையக் குற்றவாளிகளை அடையாளம் காண்பது மிகவும் சிக்கலானது மற்றும் இயலாததும் கூட.
பெரும்பாலும் இந்த "DEEP WEB"-ஐ ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களே, அதிகம் பயன்படுத்துகின்றனர். மேற்கு ஆசிய நாடுகளில், இதனை மிகக் குறைந்த அளவே பயன்படுத்துகின்றனர். ஒரு சில சமயங்களில் பயம் மற்றும் அறியாமையும் பலக் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுகிறது.