இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு ஜெர்மனியில் செயலிழக்கச் செய்யப்பட்டது

02 July 2019 அரசியல்
wwii.jpg

உலகத்திலேயே அதிக உயிரை வாங்கியப் போர் என்றால் அது இரண்டாம் உலகப்போரே. இதில் கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேருக்கும் அதிகமானோர் நேடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டனர். இக்காலக்கட்டத்தில் உலகின் பலப் பகுதிகளில் பல குண்டுகள் வீசப்பட்டுள்ளன என்பதே மறைக்கப்பட்ட உண்மை. மேலும், அக்காலக் கட்டத்தில் இருந்து இன்று வரைப் பல்வேறு இடங்களில் பல வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். சில வெடிக்கும் நிலையிலும் ஒரு சில வெடிகுண்டுகள் செயலற்ற நிலையிலும் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபோர்ட்டில் இப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் நிலையில் உள்ள வெடிகுண்டை நிபுணர்கள் கண்டுபிடித்து அழித்துள்ளனர். இதற்காக அப்பகுதியில் குடியிருந்த 60,000 மக்களை அந்நாட்டுப் போலீசாரும் அரசாங்கமும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் மற்ற இடங்களிலும் தங்க வைத்தனர். இதனையடுத்து சுமார் 1.4டன் எடையுள்ள HC4000 என்றப் பெயருடைய அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

இத்தகைய செயல் ஒன்றும் புதிதல்ல என்றாலும் இதன் அளவு, மற்ற வெடிகுண்டுகளை விட அளவிலும் வீரியத்திலும் பெரியது என்பதால் ஜெர்மனி அரசாங்கம் சற்றுக் கவலையடைந்திருந்தது. அதே சமயம், இது மிகப் பழமையானது என்பதால் இதனை செயலிழக்கச் செய்வது மிகக் கடினமான ஒன்றாகும். இது செயலிழக்கச் செய்யும் பொழுது வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனாலயே பிராங்க்ஃபோர்ட் சற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஆனால், செயலிழக்கப்பட்டதும் பிராங்க்ஃபோர்ட் முழுவதும் சகஜ நிலைக்குத் திரும்பியது. செயலிழக்கச் செய்யப்பட்ட இந்த குண்டை அருங்காட்சியகத்தில் வைக்க ஜெர்மனி அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.

HOT NEWS