டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகளும் ஒத்திவைப்பு!

15 November 2019 அரசியல்
delhiairpolution.jpg

தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசின் காரணமாக, டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து, காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருவதால், அங்கு ஆட்-ஈவன் திட்டம் கொண்டு வரப்பட்டது. காற்று மாசினைக் குறைக்க, லாரிகளில் இருந்து, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கட்டிடங்கள் கட்டும் பணி, தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனால், அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகள் உடைக்கத் தடை, கேஸ் நிரப்பத் தடை, குழிகள் மற்றும் போர்வெல் போடத் தடை எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், காற்று மாசுபாடானது இன்னும் குறைந்தபாடில்லை.

HOT NEWS