நீண்ட நாட்களுக்குப் பிறகு டெல்லியில் நல்ல காற்று!

17 November 2019 அரசியல்
delhiairpolution.jpg

கடந்த ஏழு நாட்களில், நேற்று தான் காற்றில் உள்ள நச்சுத் தன்மை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க, டெல்லியில் உள்ள சாலைகளில் நீர் தெளிக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும், தொடர்ந்து காற்றின் மாசு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இதன் காரணமாக, ஆட் மற்றும் ஈவன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், வாகனங்கள் இயக்கப் பலத் தடைகள் விதிக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டவும் தடைகள் விதிக்கப்பட்டன. அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் வெளியில் நடமாட வேண்டாம் என, அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று, காற்று மாசின் அளவானது 458 என்ற அளவினைத் தொட்டது. இது மிகவும் அபாயகரமானதாக கருதப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 357 என்ற அளவிற்குக் குறைந்துவிட்டது. இதனால், அங்குள்ள காற்றானது, சற்றுத் தெளிவாக இருந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த 7 நாட்களில் நேற்று தான் காற்றானது, சற்று தூய்மையானதாக இருந்துள்ளது.

கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று காற்று மாசின் அளவானது 321 என்ற அளவில் இருந்துள்ளது. இன்னும் வரும் நாட்களில், காற்று மாசின் அளவானது படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வரை, டெல்லியில் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS