டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு! காணாமல் போன ஊரடங்கால் அவலம்!

09 November 2020 அரசியல்
delhipolution.jpg

டெல்லியில் காற்று மாசானது, தற்பொழுது நச்சுத் தன்மை உள்ளதாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ளப் பிரச்சனைகளுள் தலையாயப் பிரச்சனையாகப் பார்க்கப்படுவது, காற்று மாசு பிரச்சனை தான். அங்குள்ள காற்றினை ஒரு நாள் சுவாசிப்பதென்பது, ஒரே நாளில் 40 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும். அந்த அளவிற்கு அந்த மாநிலத்தில் காற்றானது மாசடைந்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பித்தில் இந்தப் பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து பின்னர் அடங்கியது. கடந்த ஆண்டிலோ, ஆட் மற்றும் ஈவன் என்ற முறையினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அதனால், கடந்த ஆண்டு இந்த காற்று மாசானது சற்றுக் கட்டுப்பட்டது. இந்த சூழலில், எப்பொழுதும் குளிர்காலத்தில் தான் காற்று மாசானது கடுமையாக இருக்கும். ஆனால், தற்பொழுதே டெல்லியில் புகை மண்டலமானது, எங்கும் சூழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் இந்த காற்று மாசின் அளவானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் ஆனந்த் விகார் பகுதியில் 484 புள்ளிகளும், ஐடிஓ பகுதியில் 472 புள்ளிகளும் காற்று மாசானது பதிவாகி உள்ளது.

இப்பொழுதே, இந்த அளவில் உள்ளதால், குளிர் காலத்தில் இதன் அளவானது நச்சுத்தன்மையினை அடையும் என, பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட இந்த காற்று மாசானது, தற்பொழுது மீண்டும் பெரியத் தலைவலியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS