டெல்லி டிடி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சமஸ்க்ருத செய்திகளை, இனி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
டெல்லியில் டெல்லி டிடி சேனலில் தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி, ஏழேகால் மணி வரை, சுமார் 15 நிமிடங்களுக்கு சமஸ்க்ருத மொழியில் செய்திகளானது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இது மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது என, மத்திய தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த செய்தியினை, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள டிடி சேனல்களில், இனி காலையில் சமஸ்க்ருத மொழியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இனி தினமும் காலையில் ஏழு மணி முதல் ஏழேகால் மணி வரையிலும், சுமார் 15 நிமிடங்களுக்கு சமஸ்க்ருத மொழியில் செய்திகள் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.