டெல்லிக்கு வருகின்ற பிப்ரவி 8ம் தேதி தேர்தல்!

07 January 2020 அரசியல்
aravidkejriwal121.jpg

டெல்லியில் தற்பொழுது ஆம் ஆத்மி கட்சியானது, ஆட்சி நடத்தி வருகின்றது. அதன் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், தற்பொழுது டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பினை, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்பொழுது இந்தியாவின் தலைமையகமாக, டெல்லி உள்ளது. அங்கு பல்வேறுப் போராட்டங்களும், கவலரங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு தேர்தல் நடத்துவது குறித்து, மாநில காவல் ஆணையருடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அதில், வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி அன்று ஒரே கட்டமாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சுமார் 90,000 அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். மொத்தம், ஒரு கோடியே 46 லட்சத்து 92 வாக்காளர்கள் தற்பொழுது டெல்லியில் உள்ளனர். இவர்களுக்காக 13,750 வாக்களிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வருகின்ற ஜனவரி 14ம் தேதி அன்று, வேட்புமனு தாக்கல் செய்ய ஆரம்பிக்கலாம் எனவும், 21ம் தேதியானது வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவினைத் திரும்பப் பெற, ஜனவரி 24ம் தேதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைகளைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும், வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி அன்று, சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அதனையடுத்து, பிப்ரவரி 11ம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, உடனே அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

டெல்லியில், பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியானது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஒரு வேளை, அவ்வாறு நடந்தால், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கிடையே கடுமையானப் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியினை இழந்துள்ளதால், இந்த தேர்தலில் பாஜக வென்றேத் தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளது பாஜக.

HOT NEWS