மாசினை குறைக்க தண்ணீர் பீய்ச்சி அடித்த டெல்லி மாநகராட்சி!

28 October 2019 அரசியல்
delhipolution.jpg

pic courtesy:twitter.com/ani

டெல்லியில் காற்று மாசுபாடு மிக அதிகம். இந்தியாவிலேயே, அங்கு தான் காற்று மாசு அதிகம் என, சர்வதேச அமைப்புகளே கூறிவிட்டன. இந்நிலையில், அங்கு கடுமையான வாகனச் சட்டங்கள் உட்பட மாசினைக் குறைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நேற்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பொதுமக்களும் வெடி வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். சும்மாவ, டெல்லியானது புகைமண்டலமாக காட்சியளிக்கும். தற்பொழுது வெடியின் புகையும் சேர்ந்து கொண்டு, டெல்லியைப் புகை மண்டலமாக மாற்றியதால், அதனைக் குறைக்க டெல்லி மாநகராட்சி நூதன முயற்சி செய்துள்ளது.

டெல்லியின் கிழக்குப் பகுதியில், புகையின் அளவைக் குறைக்கும் பொருட்டு, மாநகராட்சி குடிநீர் விநியோகிக்கும் வாகனங்கள் மூலம், நீரினை தரையில் பீச்சி அடிக்கும் செயல் செய்யப்பட்டது. இது டெல்லியின் பல பகுதிகளில் செய்யப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம், காற்றில் உள்ள மாசானது, நீரில் கலந்து தரையில் படிந்து விடும். மேலும், தரையிலும் தண்ணீர் விழுவதால், அது சாலையின் ஓரமாக சென்று சேரும் என இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

HOT NEWS