டெல்லியில் மாநாட்டில் பயங்கரம்! 16 பேருக்கு கொரோனா! தமிழர்களின் நிலை?

31 March 2020 அரசியல்
coronavirusdelhi.jpg

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம், தற்பொழுது பீதியினைக் கிளப்பி உள்ளது.

டெல்லியில் நடபைற்ற தப்லீக் ஜமாத் என்ற இஸ்லாமியக் கூட்டத்தில், நாடு முழுவதும் இருந்து பல நூறு இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தில் இருந்து 1500 பேர் சென்று இருந்தனர். இந்தக் கூட்டமானது மார்ச் 21ம் தேதி நடைபெற்று உள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றக் கூட்டத்தில், பலர் தாங்களாக வந்து கலந்து கொண்டு இருக்கின்றனர். பின்னர், ஊரடங்கு அறிவிப்பதற்கு முந்தைய நாள் அனைவரும் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அந்தமானைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டனர். அவர்கள் உடலில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறி இருந்ததை அடுத்து, அவர்களுடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சோதனை முடிவில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம், மருத்துவத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் அனைவரும் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எனக் கூறியுள்ளனர். இதனால், போலீசார் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பற்றியத் தகவலைச் சேகரிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்றிருந்த 1500 பேரில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

HOT NEWS