11 மணி நேரப் போராட்டம்! டெல்லியை தெறிக்கவிட்ட போலீசார்!

06 November 2019 அரசியல்
delhipoliceprotest.jpg

போலீசார் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக, டெல்லி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சனிக் கிழமை அன்று, டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் அமைந்துள்ள கார் பார்க்கிங்கில் போலீசாருக்கும்-வழக்கறிஞர்களுக்கும் இடையே, தள்ளுமுள்ளு நிகழ்ந்துள்ளது. அப்பொழுது, பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கறிஞரை காவலர்கள் தனியாக அழைத்துச் சென்று ”கவனித்து” உள்ளனர். இதனால், அவரை மீண்டும் அழைத்து வரச் சென்ற வழக்கறிஞர்கள் முன், வானத்தினை நோக்கி துப்பாக்கியால் போலீசார் சுட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், சுமார் 1000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த போராட்டம் கலவரமாக மாற பல வழக்கறிஞர்களும் காவலர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சாகெட் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஒருவர் பணியில் இருந்த காவலரைத் தாக்கியுள்ளார். இதனைக் கண்டித்து, போலீசார் சில மணி நேரங்களில் பணி நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டெல்லி முழுவதுமே ஸ்தம்பித்தது. தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தினைத் தொடர்ந்து, துணை கமிஷ்னர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், மருத்துவமனையில் உள்ள காவலருக்கு, உயர்தர மருத்துவம் அளிக்கப்படும் எனவும், உதவித் தொகையாக 25,000 அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

HOT NEWS