டெல்லியில் மீண்டும் கலவரம்! பத்து இடங்களில் 144 தடை உத்தரவு!

24 February 2020 அரசியல்
delhipolice.jpg

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் காரணமாக, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் கலவரம் ஏற்பட்டு உள்ளதால், துணை இராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். ஜாப்ராபாத் பகுதியில் கலவரம் நடந்து முடிந்த நிலையில், மீண்டும், சிஏஏ சட்டத்தினை எதிர்ப்பவர்களுக்கும், அதனை ஆதரிப்பவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையின் காரணமாக, இந்த பிரச்சனை உருவாகி உள்ளது.

இதுவரை, இந்த கலவரத்தில் காவலர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் கலவரத்தில், பல வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளன. நிலைமை, கட்டுக்கடங்காமல் செல்வதால், டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கட்சி எம்எல்ஏ கூட்டத்தினை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டியுள்ளார்.

கலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி காவல் ஆணையரிடம் கேட்டு அறிந்துள்ளார். தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தப் போராட்டத்தில், மூன்று தீயணைக்கும் வாகனங்களும் எரிக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS