சாலையில் பிரசவம்! மீண்டும் 150 கிலோமீட்டர் நடைபயணம்! லாக்டவுன் கொடுமைகள்!

14 May 2020 அரசியல்
pregnantbelly.jpg

தற்பொழுது இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது மே-17க்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்து விட்டார். ஆனால், புலம் பெயரும் தொழிலாளர்களுக்கான உதவிகள் பற்றி ஒரு வாய் கூடத் திறக்கவில்லை.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் சாலையிலேயே கர்ப்பிணி பெண் குழந்தைப் பெற்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியினைச் சேர்ந்த தம்பதியினர் தங்களுடைய சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்கு நடை பயணமாக சென்றனர். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணிற்கு, சாலையிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், அவருடையக் கணவரால் அந்தப் பெண்ணை நடக்க வைக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிற்கு சாலையிலேயே பிரசவம் நடைபெற்றது. அதில், அந்தப் பெண்ணிற்கு அழகிய குழந்தைப் பிறந்தது. வெறும் இரண்டு மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அவர்களுடைய சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச எல்லையினை அடைந்ததும், அவர்கள் பேருந்து மூலம், அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அந்தப் பெண்ணிற்கு பிரசவம் நடைபெற்றதை அடுத்து, அந்தப் பெண்ணையும், குழந்தையையும் மத்தியப் பிரதேச மருத்துவர்கள் வந்துப் பரிசோதனை செய்துள்ளனர். அதில் இருவரும் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லாக்டவுனில் இப்படிப்பட்ட சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS