பீகாரில் வெள்ளத்தை அடுத்து டெங்கு காய்ச்சல்! பொது மக்கள் திணறல்!

08 October 2019 அரசியல்
mosquitoe.jpg

பீகாரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தற்பொழுது வரை, சுமார் 1000க்கும் மேற்ப்பட்டோர் இந்த டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பீகார் மாநிலத்தில், கடந்த மாதங்களில் கடும் மழை பெய்தது. பல இடங்களில், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. பல நூறு தங்கள் வாழ்ந்த இடங்களை இழந்தனர். இந்நிலையில், தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டு இருக்கின்றது. இதனால், பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுவதுமாக திரும்புவதற்கு, பிரச்சனைகள் ஏற்பட்டன. தற்பொழுது, மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளது.

அப்பகுதியில் தேங்கியுள்ள நீர் மற்றும் குப்பைகளின் காரணமாக, மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை சுமார் 1000க்கும் அதிகமானோர், டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு, 3 நாட்கள் இலவச டெங்கு காய்ச்சல் மருத்துவ சோதனை முகாமினை நடத்தி வருகின்றனர்.

மேலும், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பெகுசாராய், கஹாரியா, பாஹல்பூர், கட்டிஹார், பூர்ணியா உள்ளிட்ட மாவட்டங்களை, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

HOT NEWS