கீரிகள் மூலம் கொரோனா வைரஸ்! டென்மார்க்கில் பயங்கரம்! 1.7 கோடி கீரிகளை கொல்ல முடிவு!

07 November 2020 அரசியல்
mink.jpg

டென்மார்க் நாட்டில், கீரிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், 1.7 கோடி கீரிகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல முன்னணி நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த வைரஸானது, முதலில் மனிதர்களிடம் மட்டுமே பரவும் என்றுக் கூறப்பட்டது. இந்த சூழலில், இந்த வைரஸானது, மனிதர்களிடம் இருந்து மிருகங்களுக்கும் பரவும் என்றுக் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வன உயிரிகள் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு, பல நாடுகளும் தடை விதித்தன. இந்த சூழ்நிலையில், டென்மார்க் நாட்டில் உள்ள ஒரு தனியார் கீரிப்பிள்ளை வளர்ப்பு பண்ணையில் வேலை செய்பவர்களிடம், இந்த கொரோனா வைரஸ் பரவியது. அவர்கள் மூலம் சுமார் 200க்கும் அதிகமானோரிடம் இந்தக் கொரோனா வைரஸ் பரவி இருப்பதும் உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து, அவர்களிடம் கடுமையான சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில், இந்த கீரிகளின் மூலம் பரவுகின்ற கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்தக் காரணத்தால், இவைகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டில் மிங்க் வகை கீரிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. அவைகள் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சத்திற்கும் அதிகமாக, பல்வேறு பண்ணைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவைகளை எல்லாம், ஒரே அடியாக அழித்து விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்த வைரஸானது வேகமாகப் பரவுவதைத் தடுக்க இயலும் என்று நம்புகின்றது.

HOT NEWS