உபிக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்! தமிழகம் வருமா? வேளாண்துறை!

27 May 2020 அரசியல்
locustattack11.jpg

தற்பொழுது இந்தியாவிற்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்ற விஷயம் என்றால், அது ஆப்பிரிக்காவில் உருவான பாலைவன வெட்டுக்கிளிகள் தான்.

பாகிஸ்தான் வழியாக, ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் முதல் 450 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யக் கூடிய, பாலைவன வெட்டுக்கிளிகளின் ஒரு பிரிவானது, தற்பொழுது இந்தியாவின் பல மாநிலங்களில் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் கிட்டத்தட்ட ஒரு சதுர கிலோமீட்டருக்குள் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருக்கின்றன.

இந்த வெட்டுக்கிளிகள், 35,000 மனிதர்களின் உணவுகளை ஒரு மணி நேரத்தில் உண்டுவிடுகின்றன. இவைகள், மரத்தினைக் கூட விட்டு வைப்பது கிடையாது. பார்க்கும் அனைத்தையும் உண்கின்றன. குறிப்பாக, விவசாய நிலங்களில் இவைகளின் அட்டகாசமானது அதிகரித்துள்ளது. ராஜஸ்தானிற்குள் முதலில் நுழைந்த இந்த வெட்டுக்கிளிகள், தற்பொழுது பஞ்சாப், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், குஜராத் என வட இந்தியாவின் பல மாநிலங்களில், பரவி இருக்கின்றன.

இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளதா, என தமிழக அரசும், வேளாண்துறையும் ஆலோசனை நடத்தியது. அதில், இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்குள் நுழைவதற்கு வாய்ப்பில்லை எனவும், அவைகள் பறப்பதற்குத் தேவையான தட்பவெப்பநிலையும், காற்றும் தமிழகத்தில் இல்லை. அவைகளுக்கு எதிராகவே உள்ளன. மேலும், இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்குள் நுழைந்தால் என்ன செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தினர்.

HOT NEWS