உலகில் ஏற்பட்ட பல விமான விபத்துக்களை நாம் ஆய்வு செய்தால், அதில் நாம் போயிங் ரக விமானங்களே அதிகளவில் சிக்கியள்ளதை, காண முடிகிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த விமானத்தையே அதிக விமான சேவையை வழங்கும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்பதையும், நாம் புரிந்து கொள்ள வேண்டும். விமான நிறுவனங்களின் அலட்சியம், மோசமான வானிலை, தரமற்ற பராமரிப்பு, விமானியின் தவறுகள் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன.
விபத்துக்கள்பெரும்பாலான விபத்துக்கள் மோசமான வானிலை அல்லது பறக்கும் பொழுது வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், தான் நிகழ்கின்றன. இவ்வாறு, ஏற்படும் வானிலை மாற்றங்களை அனுபவம் குறைந்த விமானிகளால், கணிக்க இயலாது. மேலும், அந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே, விபத்துக்கள் ஏற்படுகின்றன. பொதுவாக போயிங் ரக விமானங்கள், அதிக அளவிலானப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலேயே, தயாரிக்கப்படுகின்றன. இதனால் பாதுகாப்பு விஷயத்தில் மிக சிரத்தை எடுத்து வேலை செய்யும் போயிங் நிறுவனம், எதிர்பாராத சிலத் தவறுகளையும் செய்துள்ளது.
பேட்டரிவெகு தொலைவுப் பயணத்திற்காக, லித்தியம் பேட்டரியைப் பயன்படுத்தி வந்தது போயிங் நிறுவனம். பயணிகளின் சொகுசானப் பயணத்திற்கு மின்சாரம் மிக அவசியம் என்பதால், இந்த வகைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், சமீபத்தில் இது மிக ஆபத்தானது என அதனை இரகசியமாக மாற்றியுள்ளது. இந்தப் பேட்டரிகள் வெப்பம் அடைந்ததும், தீ பிடிக்கும் தன்மையுடையதாக இருந்தை கண்டறிந்த போயிங் நிறுவனம், தான் தயாரித்த அனைத்து விமானங்களின் பேட்டரிக்களையும் மாற்றி வருகிறது. இந்த பேட்டரிக்கள் அதிக வெப்பம் அடைந்ததும் வெடிக்கும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்னல்பல விமான விபத்துக்கள் இயந்திரக் கோளாறால் ஏற்பட்டாலும், போயிங்கில் அந்த பிரச்சனை பெரிய அளவில் எழுந்ததில்லை. ஆனால், அதிகளவில் சிக்னல் கட் ஆகும் பிரச்சனையை, போயிங் விமானங்கள் சந்தித்துள்ளன. மோசமான வானிலையில் இந்தப் பிரச்சனை ஏற்படுவது சகஜம் எனினும், போயிங்கில் இது அடிக்கடி ஏற்பட்டுள்ளதையும், அதனால் மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதையும், விபத்துக்களை விசாரணைச் செய்தவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரக் காணும் முயற்சியில், போயிங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.