தேவராட்டம் திரை விமர்சனம்!

05 May 2019 சினிமா
devarattam.jpg

ரேட்டிங் 2.3/5

பழி வாங்குவதையும், பெண்களை பலாத்காரம் செய்பவர்களை, கருவறுக்க வேண்டும் என்பதை கதைக்களமாக கொண்டு, எடுக்கப்பட்ட திரைப்படமே தேவராட்டம் திரைப்படம்.

தொடர்ந்து, தேவர் சமூகத்தைப் பெருமையாகப் பேசி, படங்களை எடுத்து வரும் முத்தையா, இந்தப் படத்தையும் தேவர் சமூகத்தைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்களை பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும், என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.

இப்படம், தமிழகத்தின் தென் மாவட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றுக் கூடக் கூறலாம். அப்பா, தேவர் சமூகம் சார்ந்த கட்சியை வைத்துள்ளதால், கௌதம் கார்த்திக் சினிமாத் துறைக்குள் வந்ததிலிருந்தே அவருடையப் புகைப்படத்தை, தேவர் சமுதாயத்தினரின் பேனர்களிலும், கட் அவுட்களிலும் காணலாம்.

அவரும், மக்களின் இந்தப் சமுதாயப் பற்றைப் பயன்படுத்தி, படங்களை எடுத்து, பணம் பார்த்துவிடுகின்றனர். படத்தின் கதைக்கு வருவோம். கௌதம் கார்த்திக்குக்கு மொத்தம் ஆறு அக்கா. கார்த்திக் பிறந்த சிறிது நாட்களிலேயே, அவருடைய தந்தையும், தாயும் இறந்து விடுகின்றனர். அக்காவும், மாமாவுமே தாய், தந்தையாக இருந்து, வளர்க்கின்றனர். அவர்கள் வாக்கே இவருக்கு வேத வாக்கு.

ஒரு காட்சியில், அக்கா மகளை இளைஞர் குழுவினர், கிண்டல் செய்கின்றனர். இதனைப் பார்த்து அருகில் இருந்த அக்கா மகளின் தோழி அவர்களைத் தட்டிக் கேட்கிறார். இதனால், ஆத்திரமடைந்து அந்த இளைஞர்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். இதன் காரணமாக, அந்த இளைஞனை கொலை செய்கிறார்.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தையே, கார்த்திக்கின் தந்தையைக் கொன்றவர் என ஒரு சின்ன டிவிஸ்ட் அங்கு வைத்துள்ளனர். பின்னர், வில்லனுக்கும், கார்த்திக்கும் நடக்கும் பஞ்சாயத்தே மீதிக் கதை. படம் முழுக்க, தேவர் சமூகத்தின் பேச்சு வழக்கு, அவர்களுடையப் பெருமையைப் பேசியே படத்தி ஓட்டியுள்ளனர். அதே சமயம், மற்ற எந்த சமூகத்தையும் குறைத்துப் பேசமால் படத்தை நகர்த்தியிருப்பது சமார்த்தியமான முடிவு.

மற்ற இயக்குநர்களைக் காட்டிலும், முத்தையா சற்று வித்தியாசமானவர். தொடர்ந்து, தேவர் சமூகத்தைப் பெரிதாகப் பேசும் அதே சமயத்தில், மற்ற சமூகத்தை கேலியோ அல்லது கிண்டலோ செய்யாமல் சிறப்பாக எடுப்பார். இப்படத்திலும், அவ்வாறே எடுத்துள்ளார். குடும்ப செண்டிமென்ட், பெண்களைப் போற்றுதல் என படம் நன்றாக இருந்தாலும், அதேப் பழையக் கதைதான் இதில என்னத்த புதுசா செஞ்சிருக்கன்னு, ரசிகர்கள் கூறுவது நம் காதில் விழுகிறது.

HOT NEWS