தீவிரவாதிக்கு உதவியதால், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி!

14 January 2020 அரசியல்
davindersingh.jpg

கடந்த சனிக்கிழமை அன்று, ஜம்மூ-ஸ்ரீநகரில்ல் உள்ள காவலர்களின் சோதனைச் சாவடிக்கு, நான்கு பேருடன் தனியார் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனம் காஷ்மீரின் தெற்குப் பகுதிக்கு செல்ல உள்ளதாகவும், அந்த வாகனத்தினை ஓட்டியவர் கூறினார்.

இதனை அடுத்து, அந்த வாகனத்தினைப் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அந்த வாகனத்தில் இருந்தவர்களில் இரண்டு பேர், ஹஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் அவர்களுடைய எடுபிடி வேலை செய்பவர் எனவும் கண்டுபிடித்தனர். அவர்களுடன் இருந்த மற்றொருவர் காஷ்மீரில் டெபூட்டி சூப்பிரன்டன்ட் போலீசாக வேலை செய்யும், தேவிந்தர் சிங் எனவும் கண்டுபிடித்தனர்.

இந்த விஷயத்தினை, செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்த காஷ்மீர் காவல்துறை ஆணையர் விஜய் குமார், ஐ10 வாகனத்தில், இந்த நான்கு பேரும் வேகமாக தெற்கு காஷ்மீர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். இந்த வாகனம் சந்தேகப்படும் வேகத்தில் அந்தப் பகுதியில் சென்றதால், சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரி எஸ்பி சோபியன் எனக்குத் தகவல் அளித்தார். இதனை அடுத்து, என்னுடைய உத்தரவின் பேரில், அவர்களை மடக்கிப் பிடிப்பதற்கு போலீஸ் செக் பாய்ண்டினை, பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தேன்.

அந்த ஐ10 வாகனம், செக் போஸ்ட்டினை அடைந்ததும், போலீசார் அந்த வாகனத்தினையும், வாகனத்தில் இருந்தவர்களையும் மடக்கிப் பிடித்தனர். அதில், இருந்த தேவேந்தர் சிங், டெபுட்டி சூப்பிரன்டன்ட் ஆஃப் போலீஸ் என கண்டுபிடித்தோம். அவருக்கு விசாரணையின் பொழுது, எவ்வித சலுகையும் வழங்கப்பட மாட்டாது. சாதாரண, தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் எவ்வாறு விசாரிப்போமோ, அவ்வாறே அவரும் விசாரிக்கப்படுவார் என, விஜய் குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, ஜம்மூ-காஷ்மீரினைச் சேர்ந்த சிறந்த 76 போலீஸ் அதிகாரிகளுக்கு, குடியரசுத் தலைவர் மெடல் வழங்கப்பட்டது. அந்த மெடலினை, தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் சிங்கும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS