தேவி-2 திரைவிமர்சனம்! Devi2 review!

01 June 2019 சினிமா
devi2.jpg

ரேட்டிங் 2.5/5

முதல் பாகத்திற்கும், இந்த இரண்டாம் பாகத்திற்கும், ஒரு சில வித்யாசங்கள் மட்டும் தான். முதல் பாகத்தில் தமன்னா உடம்பில் ரூபி எனும் பேய் புகுந்து கொள்ளும். அதனை எவ்வாறு, பிரபுதேவா விரட்டுகிறார் என்பது தான் கதை. அதில் ஆர்ஜே பாலாஜி நாயகனின் நண்பனாக, காமெடியில் கலக்கி இருப்பார். அந்தக் கதை மும்பை நகரில் நடக்கும்.

இந்தப் படத்தின் கதை மொரீசியஸ். பிரபு தேவாவின் உடலில் பேய். இது இரண்டாம் பாகம் என்பதால் இரண்டு பேய். அதை எப்படி தமன்னா சமாளிக்கிறார். பேயை எப்படி விரட்டுகிறார் என்பது கதையின் க்ளைமாக்ஸ். பிரபு தேவாவுக்கும், தமன்னாவுக்கும் பிறந்த குழந்தையை மாமனாரின் வீட்டில் விட்டு விட்டு வேலையின் காரணமாக, தமன்னாவை அழைத்துக் கொண்டு மொரீசியஸ் செல்கிறார் பிரபு தேவா. அங்கு இரண்டு பேய்கள் பிரபு தேவாவின் உடலில் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்கின்றன.

படத்தின் காமெடிக் காட்சிகள் சுமார் ரகம். ஆர்ஜே பாலாஜியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கோவை சரளா வழகம் போல், சரவெடியாக வெடிக்கிறார். தமன்னாவின் நடிப்பு அருமையோ அருமை. ஒரு விஷயம் இந்தப் படத்தில கவனிக்கனும். தேவி படத்தின் முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் பேயைக் காட்டவே மாட்டார்கள். ஆனால், அழகான பேய் படத்தை, காமெடியாக எடுத்துள்ளனர்.

பிரபு தேவாவிற்கு 50 வயது என்றால், யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு இளமை அவரிடம் தெரிகிறது. சாம் சிஎஸ் இசையில் படத்தின் பாடல்கள் நன்றாகவே உள்ளன. மொத்தத்தில் தேவி-2, குதூகலம்.

HOT NEWS