இப்புத்தகத்தை கோடக்ஸ் கிகாஸ் என அழைப்பர். பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக காணப்படும் இப்புத்தகத்தில் பல நூறு பக்கங்கள் உள்ளன. சுமார் 3 அடி உயரமும், 6 அடி அகலமும் உடைய இப்புத்தகத்தின் பக்கங்கள் அனைத்தும் குரங்கு மற்றும் மாட்டின் தோளால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில் 620 பக்கங்களுக்கு எழுத்துக்களால் ஆன குறிப்புகள் உள்ளன. இருப்பினும், இதில் உள்ள சிலப் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. யார் இதனை நீக்கினார்கள் எனத் தெரியவில்லை என்றாலும், கண்டிப்பாக நீக்கப்பட்டுள்ள பக்கங்களில் முக்கியமான விஷயங்கள் இருந்திருக்க வேண்டும்.
இப்புத்தகம் 13ம் நூற்றாண்டில் செக் குடியரசில் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. இப்புத்தகத்தை உலகின் எட்டாவது அதிசயம் என்றேக் கூறலாம். அந்த அளவிற்கு இப்புத்தகம் மிகவும் வினோதமானது. இப்புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் இலத்தீன், கிரேக்கம், ஸ்லோவேனியன் மற்றும் ஹீப்ரூ மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒரு கால அட்டவணையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், பல மந்திர வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.
இப்புத்தகத்தின் 290வது பக்கத்தில் ஒரு பேயின் உருவத்தை வரைந்துள்ளனர். இந்தப் பேயானது இரு தூண்களுக்கு இடையில் நிற்பதைப் போன்று உள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்துள்ள படம் சொர்க்கத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய புத்தகத்தை வெறும் ஒரேப் பேனாவை வைத்து ஒருவர் மட்டுமே எழுதியுள்ளார். அதுவும் விரைவாகவே எழுதி முடித்துள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மையானது, இறந்த பூச்சிகளின் இரத்த்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பார்க்கும் பொழுது இதனை எழுதி முடிக்க குறைந்தது 25 முதல் 30 வருடங்கள் வரை ஆகும். இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க சுமார் 160 மிருகங்களின் தோலைப் பயன்படித்தியிருக்க வாய்ப்பிருப்பதாக இப்புத்தகத்தை ஆராய்ச்சி செய்தவர்கள் கூறுகின்றனர். இன்று இப்புத்தகம் நேஷனல் லைப்ரரி ஆஃப் ஸ்வீடனில் உள்ளது. இப்புத்தகம் எப்பொழுது யாரால் உருவாக்கப்பட்டது என்பதுப் பற்றியத் தகவல்கள் துல்லியமாக கிடைக்கவில்லை. இருப்பினும், இப்புத்தகத்தைப் பற்றிய ஒரு கதை, காலம் காலமாக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒரு அரசனால் சிறைத்தண்டனைப் பெற்ற ஒரு மந்திரவாதி ஒரு புத்தகத்தை ஒரு இரவிலேயே எழுத முடிவு செய்துள்ளான். ஆனால், நள்ளிரவாகியும் பாதிப்புத்தகத்தைக் கூட முடிக்க இயலவில்லை. இதனால், லூசிபர் எனும் சாத்தானை உதவிக்கு அழைத்துள்ளான். அதற்குப் பதிலாக, தன்னுடைய ஆன்மாவை காணிக்கையாகத் தருவதாக வாக்களித்துள்ளான். இதற்கு, அந்த சாத்தானும் சம்மதித்து, அப்புத்தகத்தை ஒரே இரவில் முழுமையாக முடித்துள்ளது. பின்னர், அதன் உருவத்தை அப்புத்தகத்தில் பதித்துள்ளது. இக்கதையை இப்புத்தகத்தைப் படித்தப் பலரும் உண்மை என நம்புகின்றனர்.