கொரோனாவிற்கு புதிய மருந்து! நோயினை குணமாக்குவது உறுதியானது!

16 June 2020 அரசியல்
coronavirus.jpg

உலகம் முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கு தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நோயினைத் தற்பொழுது குணப்படுத்தும் முயற்சியிலும், பரவாமல் தடுக்கும் முயற்சியிலும் பல நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவில் தற்பொழுது அவிபாவிவர் மருந்தானது உருவாக்கப்பட்டு, நோயாளிக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸினை சமாளிக்கும் மருந்தினை விஞ்ஞானிகள் தற்பொழுது பரிந்துரை செய்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் பெர்குஸ் வேல்ஸ் என்ற விஞ்ஞானி இது குறித்து கூறியுள்ளார். அவர் பேசுகையில், தற்பொழுது டெக்ஸோமீத்தோசோன் என்ற மருந்தானது, கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடும் தன்மையுள்ளதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மருந்தின் விலையும் மிகவும் குறைவு தான். இதனை நாம் ஒருவேளை முன்னரேப் பயன்படுத்தி இருந்தால், இறந்தவர்கள் 5,000 பேரினையும் காப்பாற்ற இயலும்.

இந்த மருந்தினை எடுத்துக் கொண்டவர்கள் தற்பொழுது நல்ல உடல்நிலையுடன் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தற்பொழுது விஞ்ஞானிகள் இதனைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த மருந்து இங்கிலாந்து மதிப்பில் 35 பவுண்ட்களில் கிடைக்கின்றது. இந்திய மதிப்பில் சுமார் 3354 ரூபாய் ஆகும். இந்த மருந்தானது, அனைத்து நாடுகளிலும் கிடைக்கக் கூடியதாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS