நடிகர் தனுஷ் நடித்து இந்த ஆண்டு, பக்கிரி, அசுரன் ஆகிய படங்கள் வெற்றிப் பெற்ற நிலையில், நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த என்னைநோக்கிப் பாயும் தோட்டா திரைப்படமும் வரும் 29ம் தேதி அன்று வெளியாக உள்ளது.
பிரெஞ்சு மொழியில் வெளியான, தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பக்கீர் படமானது, தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு, பக்கிரி என்றப் பெயரில் இந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் சீனி மொழிபெயர்ப்பானது, வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது.
மொத்தம், 13,000 திரையறங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, தனுஷின் படங்கள் வெற்றியடைந்து வருவதை அடுத்து, குஷியில் உள்ள தனுஷின் ரசிகர்கள், இந்த இரண்டுப் படங்களும் ஒரே நாளில் உலகளவில் வெளியாவதால், மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.