கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தில் தனுஷ்! அறிவிப்பு வெளியானது!

18 July 2019 சினிமா
dhanush-karthicksubburaj.jpg

கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதாக, அதிகாரப்பூர்வ வெளியானது.

இது குறித்து இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும், தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜூடன் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க உள்ளது.

இத்திரைப்படம், லண்டனை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

இப்படம் ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 18வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் சூட்டிங்கை வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க உள்ளனர்.

HOT NEWS