படத்தின் பெயரில் இருந்தே இது எப்படிப்பட்ட படம் எனத் தெரிந்து கொள்ளலாம். விந்தணு தானம் பற்றியது தான் இந்த தாராள பிரபு. எப்பொழுதும், ஹரிஸ் கல்யாண் படங்களுக்கென, ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருவது தான், அவரின் வெற்றி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரில், ஒரு சிலர் மட்டுமே நல்ல வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
மற்றவர்கள், பெரிய அளவில் எதையும் பெறவில்லை. இந்த விஷயத்தில் ஹரிஸ் கல்யாண் மிகவும் கெட்டிக்காரர். தொடர்ந்து, பலப் படங்களில் நடித்து வருகின்றார். இவர் எப்பொழுதும், காதல், காமம் சம்பந்தப்பட்ட படங்களிலேயே நடித்து வருகின்றார். அவ்வப்பொழுது கொஞ்சம் மாற்றிக் கதைகளைத் தேர்வு செய்தால் சளிப்படையாமல் இருக்கும்.
ஜாலியாக வேலை செய்யும் நபராக ஹரீஸ் கல்யாண். அழகான குடும்பம். ஒரே பிள்ளையாக ஹரீஸ். அதனால், படு செல்லம். இவர் செய்யும் அனைத்தையும், அவர் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஒரு பெண்ணைப் பார்க்கின்றார். காதலிக்கின்றார். அந்தப் பெண்ணும் இவரைக் காதலிக்கின்றார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இடையில் கருத்து வேறுபாட்டால் பிரிகின்றனர். அப்பொழுது நடக்கும் விஷயங்கள், பிரிந்த தம்பதி ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் தாராள பிரபு படத்தின் சுருக்கம்.
செக்சாலஜி டாக்டராக நடிகர் விவேக். அவர் செய்யும் காமெடிகள் வழக்கம் போல பாஸ் மார்க் தான். அவர் தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருப்பார் எனக் கூறினால், அது மிகையாகாது. குழந்தை இல்லாதவர்களுக்கு, ஆரோக்கியமான வாலிபரின் விந்தணுவினைப் பயன்படுத்தி, செயற்கை முறையில் கருத்தரிக்க உதவியாக இருக்கும் விவேக்கின் கண்களுக்கு சிக்கியவர் ஹரீஸ் கல்யாண்.
அவர் பின்னாலேயே சுற்றுகின்றார். அவரை மடக்கி எப்படி தான் நினைத்ததை சாதித்தார். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் மீதிக் கதை. படத்தின் பாடல்கள் ஹிட்டாகி இருந்தால், இந்தப் படம் வெளியாகி இருப்பது இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கும். இனியாவது, பாடல்கள் விஷயத்தில், ஹரீஸ் கல்யாண் கவனம் செலுத்தினால் சரி.
மொத்தத்தில் தாராள பிரபு குழந்தை செல்வம் வழங்குவார்.