தர்மபிரபு திரைவிமர்சனம்! படம் எப்படி இருக்கு?

29 June 2019 சினிமா
dharmaprabhu.jpg

எமதர்மனாக யோகிபாபு நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தர்மபிரபு. முதல் முறையாக, கதாநாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் யோகிபாபு. தன்னுடைய அழகு, திறமை இவைகளை சரியாகப் புரிந்து வைத்திருப்பதாலோ, என்னவோ அவர் தன்னை சரியாகப் பயன்படுத்தி வளர்ந்து வருகிறார். தமிழில் காமெடி நடிகர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது எனலாம். ஏனெனில், இரண்டு படங்களில், காமெடி சிறப்பாக வந்துவிட்டால் அவ்வளவு தான். அவரை ஹீரோவாக மாற்றி, ரசிகர்கள் அழகு பார்த்துவிடுகின்றனர். சரி, படத்தின் கதைக்கு வருவோம்.

எமதர்மனின் இடத்திற்கு அவருடைய வாரிசான யோகி பாபு வருகிறார். அவர் வருவதை எமதர்மனுக்குக் கீழ் வேலைப் பார்க்கும், சித்திரகுப்தனுக்குப் பிடிக்கவில்லை. பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனைக் கவனித்து வரும் சிவபெருமான், கோபம் தாங்காமல், எமலோகத்தை அழிக்க நினைக்கிறார். இவைகளை எப்படி, யோகிபாபு சமாளிக்கிறார், எமதர்மன் பதவியைக் காப்பாற்றினாரா? என்பது தான் கதை.

படத்தை யாரும் குறைச்சு எடைபோட்டுவிட வேண்டாம். படத்தில் அனைவரையும் வைத்து செய்துள்ளனர். பெரியார், அம்பேத்கர் முதல், ஈபிஎஸ் ஓபிஎஸ் வரை அனைவரையுமே நீங்கள் படத்தில் பார்த்து ரசிக்கலாம். அனைவரும் காமெடியே செய்கின்றனர். யோகிபாபுவின் பலம் அவருடைய உடல்மொழி எனப்படும் பாடிலாங்குவேஜ். அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, எமதர்மனாக காட்சித்தருகிறார்.

மற்றக் கதாப்பாத்திரங்கள் குறிப்பிடும்படி, இல்லை என்றுக் கூறாலம். இருப்பினும், படத்தில் அது பெரிய அளவில் தெரியவில்லை. இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் பார்த்து இருக்கீங்களா! அந்தப் படம் எப்படி இருக்கும். அதேப் போலத் தான் இந்தப் படமும். படத்தில் அவ்வப்பொழுது, அழுக வைக்கும் காட்சிகளும் வருகின்றன. எப்படி இருப்பினும், யோகிபாபு சமாளித்துவிடுகிறார். அவர் சமாளிக்காவிட்டால் என்ன? அவருடைய முகத்தை நீங்கள் பார்த்தாலே, சிரிப்பு வந்துவிடும். அந்த அளவிற்கு தன்னுடைய முகத்தை மாற்றி நடிப்பில் கைத்தேர்ந்தவர்.

மொத்தத்தில் தர்ம்பிரபு பரவாயில்லை, பார்க்கலாம்.

ரேட்டிங் 2.8/5

HOT NEWS