நேற்று பிக்பாஸ்3 நிகழ்ச்சியின் இறுதி நாளை முன்னிட்டு, நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அதில் போட்டியில் வெற்றி பெற்றதாக, பாடகர் முகின் அறிவிக்கப்பட்டார்.
மேலும், அப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரிடமும், கமல்ஹாசன் மேடையில் உரையாடினார். அப்பொழுது, பேசிய கமல்ஹாசன், தர்ஷன் பலரின் அபிமான பிக்பாஸ் 3 நட்சத்திரமாக இருக்கின்றார். அவர் வெளியேறியது ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது.
தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிக்கப்பட உள்ள திரைப்படத்தில் தர்ஷன் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தற்பொழுது, கமலின் ரசிகர்கள் மட்டுமின்றி, தர்ஷனின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.