அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக் குறைவால், சென்னையில் காலமானார். அவருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு 12 மணியளவில், காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த துரைக்கண்ணு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்றுக் கூறியிருந்தது. அதற்கு தற்பொழுது பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அஇஅதிமுகவிற்காக, தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் இருந்து, மூன்று முறை வெற்றி பெற்றவர் துரைக்கண்ணு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்!
— M.K.Stalin (@mkstalin) November 1, 2020
பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும்.
அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல். pic.twitter.com/i42P7mdFGn
The unfortunate demise of our Cabinet Colleague, Hon'ble Minister for Agriculture, @RDoraikkannuofl is an irreparable loss to the party & his Constituency. My neighbour in the Assembly, a soft-spoken leader who discharged his duties effectively. My deepest condolences! #RIP Annan pic.twitter.com/yzhNUHTc90
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) November 1, 2020
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 1, 2020
புரட்சித்தலைவர் MGR அவர்கள் தலைமையில் கழகத்தில் இணைந்து பல்வேறு நிலைகளில் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தவர் @RDoraikkannuofl அவர்கள். pic.twitter.com/Fd7Z5aB7ve
பொதுப்பணியிலும், கழகப் பணியிலும் பல்லாண்டுகளாக ஓய்வின்றி உழைத்தவர். மிகவும் எளிமையானவர்; அன்பாகவும், எதார்த்தமாகவும் பழகக் கூடியவர். தொகுதி மக்களின் பேரன்போடும் பேராதரவோடும் தொடர்ந்து 3 முறை சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகை சூடியவர். அவரது மறைவு கழகத்திற்கு ஈடில்லா பேரிழப்பு!
— O Panneerselvam (@OfficeOfOPS) November 1, 2020
தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/FNZ9zfudhE
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 1, 2020