ஜப்பானில் நிறுத்தப்பட்ட கப்பலில் 219 பேருக்கு கொரோனா வைரஸ்! பதறும் பயணிகள்!

14 February 2020 அரசியல்
diamondprincess.jpg

ஜப்பானின் கடற்பகுதிக்கு வந்த டைமண்ட் பிரின்ஸ் என்ற சொகுசுக் கப்பலை, அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது ஜப்பான். இதனால், அந்த சொகுசுக் கப்பலானது ஜப்பான் கடற்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை அடுத்து, அந்தக் கப்பலானது அனுமதிக்கப்பட வில்லை என, ஜப்பான் அரசாங்கம் அறிவித்தது. மேலும், அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்கு, இரண்டு முறை இந்த வைரஸ் இருக்கா என, சோதனை நடத்தப்பட்டது.

இதில், பெரும்பாலானவர்களுக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது. இருப்பினும், அந்த கப்பலில் இருந்த ஒரு மூதாட்டிக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடந்த 4ம் தேதி முதல் இந்த கப்பலானது, யோகோஹமா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நடத்தப்பட்டுள்ள நிலையில், 219 பேர் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்தக் கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள், அதிக செலவு செய்துள்ள பயணிகளுக்கே, முன்னுரிமை அளிப்பதாகவும், மற்றவர்களை உதாசீனப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள, அந்தக் கப்பலின் ஊழியர்கள் பயப்படுகின்றனர். இது குறித்து, அந்தக் கப்பலில் வேலை செய்யும் மாலுமிகளில் ஒருவரான இந்தியாவின் சோனாலி தாக்கூர் என்ற மாலூமி தெரிவித்துள்ளார்.

மும்பை மாநிலத்தினைச் சேர்ந்த அவர், அந்தக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். மேலும், தனக்கும் தன்னுடன் பணி புரியும் சக மாலுமிக்கும், கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சிள உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலில், 100 இந்தியர்கள் இருக்கலாம் எனவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் எதிர்பார்ப்புகள் தற்பொழுது ஏற்பட்டுள்ளன.

HOT NEWS