அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், முறைகேடு நடைபெற்று இருப்பது அம்பலமாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம், அடுத்த அதிபருக்கானத் தேர்தலானது நடைபெற்றது. அந்தத் தேர்தலில், டெமோக்ராட்டிக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தற்பொழுது வரை, அமெரிக்காவினை ஆளுகின்ற அதிபர் ட்ரம்ப் ஏற்கவே இல்லை. தொடர்ந்து, ஜோ பிடன் பித்தலாட்டம் செய்துள்ளதாகவும், அவரது வெற்றியினை அங்கீகரிக்கக் கூடாது எனவும் கூறி வருகின்றார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் நீதிமன்றங்களில் அவருடைய வெற்றிக் குறித்து வழக்கும் பதிவு செய்து வரகின்றார். இப்படிப்பட்ட நிலையில், புதியதாக குற்றச்சாட்டினை அதிபர் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். அதில், ஜார்ஜிய மாகாணத்தில் நிக்கல்சன் என்ற நபர் பெயரில் வாக்குப் பதிவு ஆகியுள்ளது எனவும், ஆனால், நிக்கல்சன் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
2003ம் ஆண்டில் வாக்கு வேண்டாம் என்றவர்கள் பெயரிலும், வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறியிருக்கின்றார். இதனை, அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த விஷயம் உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.