டயர்ட்டிற்க்கான சிறந்த உணவுகள்

10 March 2019 உடல்நலம்
proteinfood.jpg

முன்பெல்லாம் விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் அதிலும் குறிப்பாக நடிகைகளே டயர்ட் என்ற உணவு முறையைப் பின்பற்றினர். உடலைப் ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையைக் கூட்ட மற்றும் குறைப்பதற்காக இந்த முறைப் பின்பற்றப்படுகிறது. இப்பொழுது அனைவருமே தன் உடலைக் கட்டுக்கோப்பாகவும் மிக இளமையாகவும் வைத்துக் கொள்ள டயர்ட் உணவு முறையைப் பின்பற்றுகின்றனர்.

இதில் பல சிக்கல்களும் உண்டு. என்னவென்றால், சரியாகப் பின்பற்றவில்லை என்றால் நம் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, டயர்ட்டின் போது, எந்த விதமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பது மிகவும் இன்றியமையாதது. இங்கு, எந்த விதமான உணவுகள் இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவே நல்ல டயர்ட்டிற்குப் போதுமான ஒன்றாகும்.

இது உடல் வளர்ச்சிக்கு, குறிப்பாக தசைகளின் வலிமைக்கு இன்றியமையாதது ஆகும். இது முட்டையின் வெள்ளைக் கருவில் அதிகளவில் உள்ளது. மேலும், இறைச்சி உணவுகளான மட்டன், சிக்கன் மற்றும் மீன்களில் அதிகம் உள்ளது. இவற்றை அளவாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்மால் அதிகளவில் புரோட்டினைப் பெற இயலும். ஆனால், வேக வைத்த உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால், உடல் எடைக் கண்டிப்பாக அதிகரித்துவிடும்.

நார்ச்சத்து

இவை நரம்பு மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இவை அதிகளவில் சிறுதானியங்களில் உள்ளது. மேலும், முளைக்கட்டியத் தானியங்களை அதிகளவில் உண்பது உடல் நலத்திற்கு நன்மையே. பனங்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவைகளையும் உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

பாதாம் மற்றம் பிஸ்தா பருப்புகள்

இதனை உண்பதால் உடலில் உள்ள சுருக்கங்கள் விரைவாக நீங்கிவிடும். மேலும், உடல் எடை மாற்றத்தின் போது நம்முடையத் தோலின் பொலிவைப் பாதுகாக்க உதவுகிறது.

கீரைவகைகள்

இவை மிகவும் இன்றியமையாத மற்றும் விரைவாக அனைவராலும், அனைத்துக் காலங்களிலும் பெறக் கூடிய ஒரு உணவு வகையாகும். இதனை இரவைக் காட்டிலும் பகலில் உண்பது மிகவும் நன்மை அளிக்கும், காரணம் என்னவென்றால், இது செரிமாணம் ஆக நீண்ட நேரம் ஆகும். எனவே தான், இது பகலில் உண்ண பறிந்துரை செய்யப்படுகிறது.

அரிசி

இதனை குக்கரில் வேக வைக்காமல் சாதாரணப் பாத்திரத்தில் வேக வைத்து உண்டால் உடல் எடைக் கூடாது. மேலும், சிகப்பு அரிசியை உணவாக உட்கொள்ளுதல் அதிக அளவு சக்தியை உடலுக்கு அளிக்கும்.

HOT NEWS