சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் பெயர் மற்றும் டைட்டில் லுக் வெளியானது. இப்படத்தில், சந்தானம் மூன்று வெவ்வேறுக் கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நம்பர் ஒன் காமெடியனாக இருந்த சந்தானம், கதநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஓரளவு சுமாரானப் படங்களை கொடுத்து வந்த சந்தானம், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களையும் கொடுத்து அசத்தினார். இந்நிலையில், கடைசியாக வந்த ஏ1 திரைப்படம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, பலப் படங்களில், கமிட்டாகி உள்ளார் சந்தானம்.
இதுவரை எந்தவொரு காமெடி நடிகரும் செய்யாத வகையில், சந்தானம் கதாநாயகனாக அசத்தி வருகிறார். இந்நிலையில், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில், டிக்கிலோனா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கினை, அப்படத்தினைத் தயாரிக்கும் நிறுவனம் வெளியிட்டது.
இதில், சந்தானத்தின் பெயரினை, சன்-தா-னம் (SAN-THA-NAM) என்று காட்டியுள்ளனர்.இத்திரைப்படம் 2020ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.