தளபதி விஜய் நடிக்கும் 65வது படம் ஆரம்பிக்க உள்ள நிலையில், தற்பொழுதே தளபதி 66 படத்தின் பேச்சுவார்த்தையானது தற்பொழுது துவங்கி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படமானது, தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த சூழலில், விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதனை நெல்சன் இயக்க உள்ளார்.
இதற்கு அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகின்றது. இந்தப் படத்தில் ராசி கண்ணா கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தற்பொழுது துவங்கி உள்ளன. விரைவில், இப்படத்தின் சூட்டிங்கானது ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகின்றது. இந்த சூழலில், விஜயின் தளபதி 66 படத்தின் பேச்சும் தற்பொழுது தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் பேசப்பட்டு வருகின்றது. அதே போல், அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குநராக மாறியுள்ள சிறுத்தை சிவா விஜயினை சந்தித்துப் பேசியதாகவும், அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்ததும், விஜயின் தளபதி 66 படத்தில் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் வரிசையில் தற்பொழுது அட்லியும் இணைந்துள்ளார். இவர் விஜயினை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற வெற்றிப் படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 66 படத்தினை முழுக்க முழுக்க குடும்பப் படமாக எடுக்க வேண்டும் என விஜய் விரும்புவதாகவும், அதற்காகவே சிவா மற்றும் அட்லியிடம் கதைக் கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும், தற்பொழுது இந்த செய்திகளால் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.