40 கோடி இல்ல! 400 கோடி கேட்டேன்! இயக்குநர் மிஷ்கின் நக்கல்!

24 February 2020 சினிமா
mysskin.jpg

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து, இயக்குநர் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அந்தப் படத்தின் மீதிக் காட்சிகளைத் தானே இயக்க உள்ளதாக விஷால் முடிவு செய்திருப்பதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இது குறித்து இயக்குநர் மிஷ்கின் மௌனம் கலைத்துள்ளார். அவர் பேசுகையில், நான் 40 கோடி கேட்கவில்லை, 400 கோடி கேட்டேன். இதுவரை ஆன செலவு 100 கோடி மட்டும் தான். மீதமுள்ள படத்தினை எடுத்து முடிக்க 400 கோடி செலவாகும். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், நடிகர் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் படி காட்சிகளை வைத்தேன். அதற்கு தனியாக 100 கோடி செலவாகும்.

ஆக மொத்தம் 400 கோடி என, மிகவும் கிண்டலாக பதிலளித்தார். ஏற்கனவே, இவர் துப்பறிவாளன்2 படத்தில் இல்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்பொழுது அவருடைய பேச்சானது, அதனை உண்மையாக்கி உள்ளது.

HOT NEWS