நடிகர் விஷால், பிரச்சன்னா நடிப்பில், இளையராஜா இசையில், இயக்குநர் மிஷ்கின் உருவாக்கி வரும் திரைப்படம் துப்பறிவாளன்-2. துப்பறிவாளன் வெற்றியினைத் தொடர்ந்து, இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் படத்தின் சூட்டிங்கானது, லண்டனில் தொடங்கி நடந்து வந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டானது, நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. மேலும், சரியாகத் திட்டமிடாததால் இரண்டு நாள் சூட்டிங்கும் தடைபட்டு உள்ளது. இதனால், இப்படத்தினை தயாரித்த விஷாலுக்கு 5 கோடி ரூபாய் வரை, நஷ்டம் ஏற்பட்டு இருந்துள்ளது.
இதனால், விஷாலுக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், சூட்டிங்கினை ரத்து செய்துவிட்டு, சென்னை வந்துவிட்டார் விஷால். பின்னர், விஷாலினை இயக்குநர் மிஷ்கின் சந்தித்தாக கூறப்படுகின்றது. துப்பறிவாளன்-2 திரைப்படத்தினை எடுத்து முடிக்க, மேலும் 40 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும், அதனால் சம்பளம் அதிகமாகத் தர வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் கடுப்பான விஷால், துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து, இயக்குநர் மிஷ்கினை நீக்கிவிட்டாராம். அவருக்குப் பதிலாக, மீதியுள்ள படத்தின் காட்சிகளை, தானே இயக்க உள்ளாராம்.