தர்பார் நஷ்டம்! பணத்தைத் திருப்பிக் கேட்கும் விநியோகஸ்தர்கள்! என்னடா இது ரஜினிக்கு வந்த சோதனை?

31 January 2020 சினிமா
darbarloss.jpg

தொடர்ந்து ரஜினிக்கு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன, என்று கூடக் கூறலாம். தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தொடங்கி, முரசொலி 50வது ஆண்டு விழா வரை ரஜினிகாந்திற்கும், அவருடையப் பேச்சிற்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பி வந்தன.

இவைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவர் கூலாக மேன் வெர்ஸஸ் ஒயில்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். தற்பொழுது மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. தர்பார் திரைப்படத்தால் தங்களுக்கு 40 கோடி ரூபாய் வைர, நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனைத் திருப்பித் தரும்படியும் லைகா நிறுவனத்தினை, படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனுகியிருக்கின்றனர்.

ஒரு வாரத்திற்குள்ளேயே 150 கோடி வசூல் என்ற போஸ்டரை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட லைகா நிறுவனமே, இந்தப் படத்தால் எங்களுக்கு 40 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியதாம். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வீட்டிற்கு, விநியோகஸ்தர் படை கிளம்பியுள்ளது. ஆனால், அவர் அங்கு இல்லாமல் சூட்டிங் சென்றுவிட்டாராம்.

கடைசியாக, இவர்கள் சென்ற இடம் சூப்பர் ஸ்டாரின் வீட்டிற்கு தான். அங்கு ரஜினிகாந்த் இல்லை எனவும், வருகின்ற வெள்ளிக்கிழமை இது குறித்து பேசலாம் எனவும் அவர் தரப்பில் கூறியிருப்பதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாபா, குசேலன் மற்றும் லிங்கா படத்தினைத் தொடர்ந்து, இந்தப் படத்திற்கும் ரஜினிகாந்த் பணத்தினைத் திருப்பித் தருவார் என, பட விநியோகஸ்தர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இருப்பினும், இது பற்றி எந்த விநியோகஸ்தரும் வாய் திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS