தேமுதிக முப்பெரு விழா! விஜயகாந்த் மற்றும் பிரமலதா பேச்சு! ஒரு நாள் ஒரு பொழுதாவது வரும்!

16 September 2019 அரசியல்
dmdkcaptain.jpg

நேற்று தேமுதிகவின் முப்பெரு விழா, திருப்பூரில் நடைபெற்றது. அதில், தேமுதிகவின் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதில் கேப்டன் விஜயகாந்தும் கலந்து கொண்டார்.

அப்பொழுது பேசிய அவர், ஒரு நாள், ஒரு பொழுதாவது விடிவு காலம் பிறக்கும், அப்பொழுது நம் தமிழகத்தை தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவேன் என, விஜயகாந்த் பேசினார். அப்பொழுது உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் ஒரு சிலர், அழ ஆரம்பித்துவிட்டனர். பின்னர், தன்னுடையப் பேச்சினைத் தொடர்ந்த விஜயகாந்த், அடுத்தப் பொதுக்கூட்டத்தில், ஒரு மணி நேரம் கண்டிப்பாக பேசுவேன் எனக் கூறினார்.

பின்னர் பேசிய அக்கட்சியின் பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இனி பேனர் வைக்கும் கூட்டங்களுக்கு நான் வரமாட்டேன் என, திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருக்கிறார். நான் சொல்கிறேன், திரு ஸ்டாலின் அவர்களே, பேனர் கலாச்சாரத்தைக் கொண்டு வந்ததே, திமுக தான். அதிமுக பேனர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதும், நீலிக் கண்ணீர் வடிக்கிறார் எனக் கூறினார்.

அடுத்த வந்த பிரபாகரன் பேசுகையில், கேப்டன் கொஞ்சம் கண்ணை மூடினார். அனைவரும் அவரவர் வாய்க்கு வந்ததாற்போல் பேசுகின்றனர். திமுக ஒரு பழைய கட்சி. அதனால் தான் இளைஞர்களை அக்கட்சிக்கு சேர்க்கின்றனர். தேமுதிகவில் இங்கு இருப்பவர்கள் அனைவருமே, இளைஞர்கள் தான். இங்கு கூடியிருக்கும் கூட்டம் போதாதா எனக் கூறினார். மேலும், அவர் பேசுகையில், கேப்டனைப் பற்றித் தவறாக பேசினால், செவிலிலேயே வையுங்கள் எனவும் கூறினார்.

HOT NEWS