வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக தலைமையில் 3வது அணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக, விஜயகாந்த மகன் தெரிவித்து உள்ளார்.
தற்பொழுது அஇஅதிமுக கூட்டணியில், தேமுதிக, பாமக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இருந்து வருகின்றனர். அதில், பாஜகவும் உள்ளது. தற்பொழுது வருகினற சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து பாமக உள்ளிட்டக் கட்சிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது.
அண்மையில், ஆளும் அதிமுக அரசிற்கு எதிராக, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் செய்திருந்தார். இது அரசியலில், அதிர்வலையினை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் புதியதாக அரசியலில் சலசலப்பை உருவாக்கி உள்ளார். அவர் தன்னுடைய டிவிட்டப் பக்கத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக தலைமையில் 3வது அணி உருவாகலாம் என்றுக் கூறியிருக்கின்றார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைமையில் 3வது அணி உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.