விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திமுக தலைவர் முக ஸ்டாலின்!

26 February 2020 அரசியல்
mkstalinoffice.jpg

கொளத்தூர் தொகுதியில், விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் உதவி செய்தார்.

கொளத்தூர் தொகுதியில், ஆய்வு செய்வதற்காக முக ஸ்டாலின் சென்றிருந்தார். அப்பொழுது, அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர், நடந்து சென்றவர் மீது மோதியிருக்கின்றார். இதனால், நடந்து சென்றவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த முக ஸ்டாலின், தனக்குப் பாதுகாப்பிற்காக வந்திருந்த காவல்துறை வாகனத்தில், பாதிக்கப்பட்டவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

HOT NEWS