தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெல்லும்! முக ஸ்டாலின் பேச்சு!

06 September 2019 அரசியல்
mkstalinlatest.jpg

நேற்று கோவையில் நடைபெற்ற, புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முக ஸ்டாலின், 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும், என பேசினார்.

நேற்று கோயம்புத்தூர் ஈச்சானூரில் உள்ள செல்வம் மஹாலில், திமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. மு.கண்ணப்பன் எழுதிய வாழ்வும், பணியும் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, புத்தகத்தினை வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.

அப்பொழுது பேசிய அவர், தமிழ் மொழிக்காகப் போராடும் கட்சியாக திமுக விளங்குகிறது என்றார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கண்டிப்பாக, 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிப் பெறும் எனவும் கூறினார்.

HOT NEWS