இந்தியாவிலேயே இந்த எதிர் கட்சி மட்டுமே ஆக்டிவ்வாக உள்ளது!

05 April 2020 அரசியல்
mkstalincovid19.jpg

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், 3,374 பேர் இந்த நோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 267 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 77 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்த ஊரடங்கு உத்தரவானது நடப்பில் இருக்க உள்ளது. இந்நிலையில், தங்களால் முடிந்த உதவியனை தாராள மனதுடன் செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதனுடன், பிஎம்கேர்ஸ் என்ற வங்கிக் கணக்கின் தகவலையும் வெளியிட்டு, பணத்தினை இந்த கணக்கில் செலுத்தலாம் எனவுக் கூறினார்.

தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் மாநில முதல்வர்கள் தங்களுடைய நிவாரண வங்கிக் கணக்குகளுக்கு பணம் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களால் முயன்றப் பண உதவி, பொருளதவி, உணவு, குடிநீர், அவசரத் தேவைகளைச் செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய ரஜினிகாந்த் மட்டும், பொதுமக்களுக்காக செய்வதாகத் தெரியவில்லை. ஆனால், அவர் பெப்சி அமைப்பினைச் சேர்ந்த ஊழியர்களுக்காக 50 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார். கமல்ஹாசன் தன்னுடையப் பங்காக 10 லட்ச ரூபாயினை அறிவித்து உள்ளார். நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக, திமுக எனப் பலக் கட்சிகள் தமிழகத்தில் உள்ளனர்.

அதே போல், இந்திய அளவில் பல எதிர்கட்சிகள் உள்ளனர். இருப்பினும், பெரிய அளவில் எதிர்கட்சிகள் எதுவும் உதவுவதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழகத்தினைச் சேர்ந்த திமுக மட்டும் தொடர்ந்து தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும், அனைத்து வழிகளிலும் செய்து கொண்டே இருக்கின்றது. திமுக தலைவர் முக ஸ்டாலினும், தன்னுடைய சார்பில் பல உதவிகளை வழங்கி வருகின்றார். அவருடையக் கட்சியினர், மற்ற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அம்மாநில முதல்வர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.

இது போல், இந்தியாவில் உள்ள எந்த எதிர்கட்சியும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. இக்கட்டான சூழ்நிலையிலும், தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது திமுக. தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில ஊழியர்களுக்காகவும், தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றது. தங்களுடைய எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தினை பொதுமக்களுக்காக வழங்குவர் எனவும், முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

HOT NEWS