கேரளாவில் மருத்துவமனை மூடல்! மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

18 March 2020 அரசியல்
coronavirus1.jpg

கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனிமைப் படுத்தப்பட்டார்.

ஸ்ரீசித்திரை மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று வந்துள்ளார். அவர் வந்த பின், அவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்துள்ளது.

இருப்பினும், அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தன்னுடைய நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்துள்ளார். ஒரு நாள் அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, தன்னுடையப் பயணத் தகவல்களை அவர் தன்னுடைய உயரதிகாரிக்கு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது.

அந்த சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அதனைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த விஷயம் மாநில சுகாதாரத்துறைக்கு சென்றது. அவ்வளவு தான். மருத்துவரைத் தனிமைப்படுத்தி, அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமின்றி, அவருடன் நெருக்கமாகப் பழகிய குடும்பத்தினர், அலுவலக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடமும் சோதனை செய்து வருகின்றனர்.

இவருடன் பணிபுரிந்து மற்ற ஊழியர்களுக்கும், இந்த நோய் தொற்றி ஏறபட்டு இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் பணிபுரிந்த மருத்துவமனையானது, தற்காலிகமாக மூடப்படும் என கூறப்படுகின்றது.

HOT NEWS