மருத்துவர்கள் போராட்டம் தொடர்கின்றது! முக ஸ்டாலின் ஆதரவு!

29 October 2019 அரசியல்
mkstalinlatestphoto.jpg

தொடர்ந்து நான்காவது நாட்களாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு நாட்களாக தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வின் காரணமாக, தங்களுக்கு வழங்கப்படும் மேற்படிப்பிற்காக வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

மருத்துவக் கல்லூரிகளுக்கென, குறைந்த பட்ச தகுதி என்ற ஒன்றினை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக, மருத்துவக் காலியிடங்கள் பலவற்றை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

எந்த அளவிற்கு, நோயாளிகள் வருகின்றார்களோ அந்த அளவிற்கு படுக்கை உட்பட பல வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும், போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது, என்ற குற்றமும் சாட்டி வருகின்றனர்.

இத்தகையை கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், ஒரு சில மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடையப் போராட்டத்தினை ஆதரிக்கும் பொருட்டு, தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக கட்சியின் தலைவருமான முக ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இப்போராட்டத்தில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரில், மூன்று பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், தங்களை தமிழக அரசின் சார்பில் யாரும் வந்து சந்திக்கவில்லை எனவும், இதனால், தங்களுடையப் போராட்டத்தினை தீவிரப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

HOT NEWS