டெல்லியில், ஹிந்தி சீரியல் நடிகையை, நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்த ஊரடங்கானது நடைமுறையில் இருக்க உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து முக்கிய நகரங்களும், சாலைகளும் வெறிச்சோடிப் போய் உள்ளன. இதனால், தெருவில் இருக்கின்ற நாய்கள் உணவிற்காக கஷ்டப்படுகின்றன.
ஹிந்தி டிவித் தொடர்களில் நடித்து வரும் நடிகையான அஞ்சல் குரானா, ஊரடங்கு சமயத்தில் வெளியில் நடைபயிற்சி சென்றுள்ளார். மோடியின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து, தன்னுடைய நாய்க்குட்டியினைப் பார்த்து, கைதட்டியுள்ளார். இதனால், அவருடைய நாய் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் உள்ள நாய்களும் ஒன்று கூடிவிட்டன.
இதனால் செய்வதறியாது திகைத்துப் போன அஞ்சல் குரானா, திடுக்கிட்டுப் போனார். அவர் சுதாரிப்பதற்குள், அந்த நாய்கள் அவருடைய இடுப்பு, கால் மற்றும் கைகளை பதம் பார்த்துவிட்டது. இதனால் அலறியுள்ளார் அஞல். இவருடைய அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து, அவரை நாய்களிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம், தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு சமயத்தில், இவர் எதற்கு வெளியில் நடமாடினார் எனவும் பலர் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.