மே-25 முதல் உள்நாட்டு விமான சேவை! அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

21 May 2020 அரசியல்
boeing.jpg

மே-25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுப்போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல், இந்தியா முழுவதும் 200 ரயில்களை முதற்கட்டமாக இயக்க, ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரத்தினைக் கருத்தில் கொண்டு உள்நாட்டுப் போக்குவரத்தினை மட்டும் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையிலான, பேருந்து போக்குவரத்து சேவைக்குத் தடை தொடர்கின்றது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், வருகின்ற மே-25ம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவையினை அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கேற்றாற் போல, விமான நிலையங்களும், விமான நிறுவனங்களும் தயாராக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், டிக்கெட் புக்கிங் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS