24ம் தேதி இந்தியா வருகின்றார் டிரம்ப்! வெள்ளை மாளிகை அறிவிப்பு! 70 லட்சம் பேர் வரவேற்பு!

12 February 2020 அரசியல்
moditrump.jpg

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு, ஹூஸ்டன் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதற்கு, தற்பொழுது அமெரிக்க அதிபர் டிரம்ப் சம்மதித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியப் பிரதமர் மோடி, மிக கண்ணியமான மனிதர். ஒழுக்கமானவரும் கூட. அவரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். விரைவில், இந்த மாத இறுதியில் நாம் இந்தியாவில் சந்திப்போம் என்றுக் கூறியுள்ளார்.

அவர் பிப்ரவரி 24ம் தேதி அன்று, குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கு வருகைத் தர உள்ளார். அங்கு, புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா மைதானத்தில், உரையாற்ற உள்ளார். அதில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். இந்த மைதானம் தற்பொழுது தான் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய மைதானமான, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தினை விட, அளவிலும் பெரியது. இந்த மைதானத்தில், சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்க இயலும்.

இந்த மைதானத்தில் இருவரும் உரையாட உள்ளனர். அதுமட்டுமின்றி, அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மோதிரா மைதானம் வரை சுமார் 50 முதல் 70 லட்சம் பேர் வரிசையாக நின்று, டிரம்ப்பினை வரவேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் பொழுது, புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இணைய உள்ளன.

HOT NEWS