வெளியானது டிரம்பின் வருட உடல் பரிசோதனை முடிவு!

04 June 2020 அரசியல்
trumpchina1.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வருடாந்திர உடல் பரிசோதனை முடிவு, தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அதிபரின் உடல்நலம் குறித்தும், அவருடைய உடல்நிலைக் குறித்தும் தகவல்கள் வெளியிடுவது வெள்ளைமாளிகையில் வழக்கமாக உள்ளது. அதனடிப்படையில், தற்பொழுது அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலைக் குறித்து, அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 110 கிலோ எடையும், ஆறடி மூன்று அங்குல உயரத்துடனும் இருக்கின்றார். அவருடைய இரத்திக் கொதிப்பின் அளவானது 121/79 என்ற அளவில் உள்ளது. அவருடைய இதயத் துடிப்பானது, நிமிடத்திற்கு 63 என்றக் கணக்கில் உள்ளது. மேலும், அவருடைய உடலில் உள்ள கொழுப்பானது 167 என்ற அளவில் உள்ளது.

இது, சென்றை ஆண்டினைக் காட்டிலும் 29 குறைவாகும். கடந்த ஆண்டு 196 என்ற அளவில் இருந்தது. அதே போல், அவருடைய எல்டிஎல் அளவானது 100க்கும் குறைவாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினைத் தான் எடுத்து வருவதாக, அவர் கூறியதால் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

HOT NEWS