என்னை முத்தம் கொடுக்க அலுவலகத்திற்கு அழைத்தார் டிரம்ப்! பிரபல செய்தித் தொடர்பாளர் பேட்டி!

06 January 2020 அரசியல்
courtneyfriel.jpg

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான, பாக்ஸ் செய்தி நிறுவனத்தில் வேலை செய்தவர் கார்டினி ப்ரியல். இவர் தற்பொழுது, அந்நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டார். அவர் தற்பொழுது, ஒரு அதிரடி குண்டு ஒன்றினை போட்டுள்ளார்.

அவர் கூறுகையில், தன்னை முத்தம் கொடுப்பதற்காக அதிபராவதற்கு முன், டொனால்ட் டிரம்ப் தன்னுடைய அலுவலகத்திற்கு வரச் சொன்னார் எனக் கூறியுள்ளார். பாக்ஸ் அன்ட் ப்ரண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியினை இவர் தொகுத்து வழங்கி வந்தார். அப்பொழுது டொனால்ட் டிரம்ப்பினை பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியின் பொழுது, கார்டினி தான் பாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் இருக்கும் கவர்ச்சிகரமான தொகுப்பாளர் எனக் கூறினார். இது வைரலானது. இது நடந்து பல வருடம் ஆகின்றது.

இந்நிலையில், தான் புதிதாக எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் மேலும் ஒரு அதிரடி சம்பவத்தினைப் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு நாள் டொனால்ட் டிரம்ப் போன் செய்தாராம். மிஸ் யுனிவர்ஸ் பேஜன்ட் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராகப் பணிபுரியும் வாய்ப்பு வந்தது. அப்பொழுது, எனக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமும் இருந்தது. அந்த தருணத்தில் எனக்கு டொனால்ட் டிரம்ப் போன் செய்தார். அதில், அந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைப்பது மிகவும் கடினம். அது வேறொரு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி எனக் கூறினார். மேலும் அவர் பேசுகையில், நீங்கள் என் அலுவலகத்திற்கு வாருங்கள், அப்பொழுது தான் நாம் முத்தம் தர இயலும் என்றார்.

ஆனால், எனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக் கூறி போனை கட் செய்துவிட்டேன் எனக் கூறினாராம். இது போல் பலமுறை, டொனால்ட் டிரம்ப் பலரிடம் பேசியுள்ளார். அதனை எல்லாம் தாண்டித் தான் தற்பொழுது அதிபராகி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS