கொரோனா வைரஸ் சீனாவில் உருவானது! டிரம்ப் திட்டவட்டம்!

01 May 2020 அரசியல்
donaldtrumpfun.jpg

என்னிடம் ஆதாரம் உள்ளது எனவும், கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஊஹான் ஆய்வுக் கூடத்தில் தான், உருவாகி உள்ளது எனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில், பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

இதனிடையே, தொடர்ந்து ஆரம்பம் முதலே, சீனா மீது தன்னுடைய குற்றச்சாட்டினை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சுமத்தி வருகின்றார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும், இதனையே தெரிவித்தார். செய்தியாளர்கள் டிரம்பிடம் கேள்வி கேட்டனர். அதில், ஊஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில் தான், இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதற்கான, ஆதாரங்கள் வைத்திருக்கின்றீர்களா எனக் கேள்விக் கேட்டனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய டிரம்ப், ஆம் என்னிடம் உள்ளது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. விரைவில் உண்மை வெளியாகும் என்றுக் கூறுகின்றார். அவர் மேலும் பேசுகையில், சீனாவிற்கு வக்காளத்து வாங்கும், உலக சுகாதார மையம் அதன் செயலுக்கு வெட்கப்பட வேண்டும். தொடர்ந்து, சீனாவிற்காக, உலக சுகாதார மையம் பேசி வருவது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS